பேட்டையில் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு
நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு;
சென்னை அடையாறில் இன்று (ஜூலை 3) 28 நகர்புற நல வாழ்வு மையங்களுக்கு 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேட்டை 22வது வார்டு மலையாள மேட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகர்ப்புற நல வாழ்வு மையத்தை கவுன்சிலர் மாரியப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.