இரண்டு வரியில் திருக்குறளை சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது- செந்தில் பாலாஜி.

இரண்டு வரியில் திருக்குறளை சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது- செந்தில் பாலாஜி.;

Update: 2025-07-03 10:06 GMT
இரண்டு வரியில் திருக்குறளை சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது- செந்தில் பாலாஜி. தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்னும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று இரவு கரூர் உழவர் சந்தை அருகில்கட்சியின் அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்திற்கு வரும் பிரதமர் ஆனாலும் நிதியமைச்சர் ஆனாலும் இரண்டு வரியில் திருக்குறளை சொல்லிவிட்டு தமிழ்நாட்டின் மீது பற்று கொண்டிருக்கிறோம் என்று தமிழக மக்களை ஏமாற்றி விட நினைக்கிறார்கள். இது பெரியார் மண், திராவிட மண்.ஒரு போதும் பிஜேபியாலோ மோடியாலோ தமிழக மக்களை ஏமாற்றி விட முடியாது என தெரிவித்தார்.

Similar News