வேலாயுதம்பாளையம் சாலையை கடக்க முயன்ற போது டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம்.
வேலாயுதம்பாளையம் சாலையை கடக்க முயன்ற போது டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம்.;
வேலாயுதம்பாளையம் சாலையை கடக்க முயன்ற போது டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா ,ஊஞ்ச மரத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து வயது 59. இவர் ஜூலை 1ஆம் தேதி இரவு 9 மணி அளவில் டிஎன்பிஎல் ஆலை சாலையிலிருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் வேலாயுதம்பாளையம் முத்தாலம்மன் மளிகை கடை அருகே சென்றபோது , சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த கரூர் மாவட்டம், க.பரமத்தி , நாச்சிமுத்து நகரை சேர்ந்த யுவராஜ் வயது 23 என்பவர் ஓட்டி வந்த டூவீலர் , காளிமுத்து ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் பலத்த காயமடைந்த காளிமுத்துவை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக காளிமுத்து அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் , டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.