புகலூர்-ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புகலூர்-ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
புகலூர்-ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புகலூர் நகர திமுக அலுவலகத்தில் நேற்று ஓர் அணியில் தமிழ்நாடு ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் குணசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அரசின் வரலாற்றுச் சாதனை திட்டங்களை வீடு வீடாக எடுத்துச் சென்று ,செயலியின் வாயிலாக கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டு அறிவது , வாக்குச்சாவடி முகவர்கள் BLA-2 மற்றும் பூத் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில , மாவட்ட ,நகர நிர்வாகிகள் , மண்டல பொறுப்பாளர்கள் , வாக்குச்சாவடி (BLA-2) வாக்குச்சாவடி தொழில்நுட்ப நிர்வாகிகள் (BDA)உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.