பணிகளை விரைவாக முடிக்க கலெக்டர் உத்தரவு

உத்தரவு;

Update: 2025-07-04 01:48 GMT
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்தது.கலைஞரின் கனவு இல்லத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நபார்டு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தனித்தனியாக கேட்டறிந்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் முடிவுற்ற திட்டப் பணிகளை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நிலுவைப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தற்போது நடந்து வரும் பணிகளின் தரத்தினை தொடர்ந்து உறுதி செய்து, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டப் பணிகளும் முறையாக பொதுமக்களை சென்று சேர்வதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News