திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு

சேலத்தில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்;

Update: 2025-07-04 04:03 GMT
அறுபடை வீடுகளில் இரண்டாம் படையாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதாலும், திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் திகழ்ந்து வருவதாலும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சேலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் சேலத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் என்றும், எனவே, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News