ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய துணை மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு;
திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு இன்று (ஜூலை 4) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு பாளையங்கோட்டை உதவும் இல்லங்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜு பங்கேற்று உணவினை வழங்கினார். தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகள் துணை மேயர் ராஜூவிற்கு பிரார்த்தனை செய்தனர்.