மூலமங்கலத்தில் சாலையை கடக்கும் போது டூவீலர் மீது கார் மோதி விபத்து.
மூலமங்கலத்தில் சாலையை கடக்கும் போது டூவீலர் மீது கார் மோதி விபத்து.;
மூலமங்கலத்தில் சாலையை கடக்கும் போது டூவீலர் மீது கார் மோதி விபத்து. கரூர் மாவட்டம் , புகலூர் தாலுக்கா , நடையனூர் அருகே கோம்புபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது 55. இவர் ஜூலை 3-ம் தேதி காலை 11 மணியளவில் கரூர் - சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் மூலிமங்கலம் பிரிவு அருகே சாலையை கடக்கும் போது, கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பாஸ்கர் வயது 45 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் கனகராஜ் ஓட்டிச் சென்ற டூவீலர்மீது மோதிவிபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கனகராஜ் - ஐ மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கனகராஜ் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை கொண்ட காவல் துறையினர் , காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பாஸ்கர் மீதுவழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.