வரதராஜபுரத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி- எம்எல்ஏ பங்கேற்பு.

வரதராஜபுரத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி- எம்எல்ஏ பங்கேற்பு.;

Update: 2025-07-05 05:00 GMT
வரதராஜபுரத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி- எம்எல்ஏ பங்கேற்பு. கரூர் மாவட்டம் , க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்கூர் ஊராட்சியில் உள்ள வரதராஜபுரத்தில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நேற்று நடைபெற்றது. பூமி பூஜை முடிந்த பிறகு சமுதாய கூடம் அமைக்கும் பணிக்கான பணியை துவக்கி வைத்தார் எம்எல்ஏ இளங்கோ. இந்த நிகழ்ச்சியில் க. பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி, க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

Similar News