வாய்க்காலில் லாரி கவிழ்ந்து ஒட்டுனர் காயம்
மன்னார்குடி அருகே வாய்காலில் லாரி கவிழ்ந்தது ஒட்டி வந்த உரிமையாளர் படுகாயம்;
மன்னார்குடி அருகே மன்னார்குடி திருவாரூர் சாலை அருகே ராமாபுரத்தில் மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் தங்களது லாரிகளை நிறுத்தும் இடம் உள்ளது.நேற்று மன்னார்குடி கீழ போலாம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 52 )என்பவர் லாரி நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது லாரியை எடுத்துக்கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக எடுத்துக்கொண்டு ஓட்டி வந்தார்.சிறிது தூரத்தில் கட்டுப்பாட்டை இழந்து லாரி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜ் மன்னார்குடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதுகுறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்