மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் உழவுப் பணி தீவிரம்
குறுவை நெல் விதைப்பிற்காக உழவுப் பணி மேற்கொள்ளும் விவசாயிகள்;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளான காரி கோட்டை,செருமங்கலம்,காஞ்சி குடிக்காடு,நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறு மற்றும் ஆற்று ப் பாசனத்தின் மூலம் குறுவை உழவுப்பணிகள் நடைபெற்று வருகிறது நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவு பணிகளுக்காக டிராக்டர் மூலம் மண்ணை சமன்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.