சேரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருட்டு
அரசு துணை சுகாதார நிலையத்தில் கதவை உடைத்து மின் மோட்டார் மின்விசிறி திருட்டு;
மன்னார்குடி அருகே சேரன் குளம் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வரும் சங்கீதா இன்று காலை வழக்கம் போல அரசு துணை சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளார் அப்போது முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் பின்பு உடனடியாக மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மன்னார்குடி போலீசார் உள்ளே சென்று பார்த்த பொழுது மின்மோட்டார் மின்விசிறி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதை எடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர் மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவைகளை சோதனை செய்து வருகின்றனர் அரசு அலுவலகத்திலேயே திருட்டு சம்பவம் நடைபெற்ற நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது