ராசிபுரம் அருகே விவசாய நிலத்தை பராமரிப்பதற்காக எடுத்துச் சென்ற டிராக்டர் நிலைத்தடுமாறி வயலில் கவிழ்ந்து விபத்து. சம்பவ இடத்திலேயே விவசாயி பலி..

ராசிபுரம் அருகே விவசாய நிலத்தை பராமரிப்பதற்காக எடுத்துச் சென்ற டிராக்டர் நிலைத்தடுமாறி வயலில் கவிழ்ந்து விபத்து. சம்பவ இடத்திலேயே விவசாயி பலி...;

Update: 2025-07-06 13:44 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குறுக்குப்புறம் அருகே உள்ள எளையபாளையம் சடையப்பன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(57) இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பராமரிப்பு காரணமாக உறவினரிடம் டிராக்டரை இனாமாக வாங்கிக்கொண்டு விவசாய நிலத்தில் உழுவதற்காக சென்று உள்ளார். அப்போது பரமசிவம் டிராக்டரை வாங்கிக்கொண்டு தனது விவசாய நிலத்தில் உள்ள பரப்பு வழியாக சென்று கொண்டிருந்த போது டிராக்டர் பரமசிவத்தின் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் தலைக்குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் பரமசிவம் மீது டிராக்டர் கவிழ்ந்தில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியானார். பின்னர் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பரமசிவம் என்பவருக்கு 2 மகன்கள் உள்ளதாகவும், அவர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த பரமசிவம் தனது விவசாய நிலத்தை பராமரிப்பதற்காக வந்ததாகவும் தற்போது அவர் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Similar News