இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர
அரசாங்கம் தன்னை திருத்தி கொள்ள வேண்டும் இல்லையென்றால் வரும் காலங்களில் முருக பக்தர்கள் பாடம் சொல்வார்கள் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் பேட்டி;
திண்டுக்கல் மாநகராட்சி அருகில் இந்து முன்னணி சார்பாக இந்து கடவுள்களை இழிவுபடுத்தி விமர்சனம் செய்தை கண்டித்து தண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளிடம் அளித்த பேட்டியில், மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. மாநாடு அறிவிப்பு வந்த உடனே கம்யூனிஸ்ட் நக்சலைட்டுகள் எல்லாம் சேர்ந்து மாநாடு நடக்கக்கூடாது என் முயற்சி செய்து, திண்டுக்கல் தாடிக்கொம்புவில் தெருமுனை பிரச்சாரம் முருகனை கேவலபடுத்தி விமர்சனம் செய்தனர். முருகனை ஏன் இழிவுபடுத்தி பேசுகிறீர்கள் என கேட்டதற்கு முருக பக்தர்கள் தாக்கப்பட்டனர். அதற்கான கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு தெருமுனை பிரச்சாரத்திற்கான அனுமதி கொடுக்கக் கூடாது ரத்து செய்ய வேண்டும். இந்து விரோத சக்திகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது 2026 இல் இந்துக்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்துக்களில் ஒற்றுமை வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னி மலையை கிறிஸ்தவ மலையாக மாற்றுவதாக சொன்னார்கள். அங்கு கிட்டத்தட்ட 50,000 மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் மிரள வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை என சொல்லக்கூடிய நிலை நிலை ஏற்பட்டு அங்கிருக்க கூடிய இந்துக்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார்கள். காவல்துறையினர் அங்கு செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி கொடுக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இந்து மக்கள் ஒன்று கூடினர். அதற்காக இந்து மக்களின் இடையே ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் ஆரம்பிக்கப்பட்டு அதன் வேலை நடந்து கொண்டிருந்த பொழுது இந்த அரசாங்கம் எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். தடை செய்ய வேண்டும் அங்கு யாரும் வரக்கூடாது என பல்வேறு முயற்சி செய்தது. குறிப்பாக அறநிலையத்துறை அமைச்சர் காவல்துறையை தூண்டிவிட்டு அங்கு எதுவும் வேலை செய்ய விடக்கூடாது என தூண்டி விட்டனர். நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று 10 நாட்கள் நடக்க வேண்டிய நிகழ்ச்சி 7 நாட்களாக நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏழு நாட்களிலும் தினசரி ஒரு லட்சம் பேர் விதம் 7 லட்சம் பேர், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆறுபடை வீட்டையும் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர். மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கந்த சஷ்டி கவசம் 5 லட்சம் பேர் சொன்னார்கள். 5 கோடி பேர் அதை நேரலையாக பார்த்துள்ளனர். அரசாங்கம் அதை திருத்தி கொள்ள வேண்டும் இல்லையென்றால் வரும் காலங்களில் முருக பக்தர்கள் பாடம் சொல்வார்கள். பொதுவாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. காவல்துறை முதலமைச்சர் கையில் இல்லை என நினைக்க வேண்டியதாக உள்ளது. பல கோஷ்டிகளாக இந்த கட்சி இயங்கி வருகிறது. அதனால்தான் இந்த அரசாங்கம் பல விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எங்கிருந்து உத்தரவு வருகிறது. எஃப் ஐ ஆர் இல்லாமல் தனி நபரை அடித்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ கண்துடைப்புக்காக கைது செய்துள்ளனர். இது மாதிரி சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் நடக்கிறது. உளவுத்துறை சரியில்லை என தெரிகிறது. ஒருவர் மீது மூன்று வழக்கு, நான்கு வழக்குகள் இருந்தால் காவல்துறை கண்காணிக்க வேண்டும். கிராமங்களில் அதிக அளவு கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. கொலை செய்யாதவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பின்னர் பிடிக்கும்போது தாங்கள் தான் செய்தோம் என சொல்கிறார்கள். காவல்துறையினர் அதற்கு சரியான பதில் சொல்ல வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்த கேள்விக்கு, அவர் சொல்வது ஒன்றும் புரியவில்லை. எங்கேயும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இருக்கும். இவர் அனைவரையும் ஒன்று சேர்க்கிறாரா என தெரியவில்லை. ஓரணி என்றால் விளக்கம் சொல்ல வேண்டும் என தெரிவித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இந்து கடவுள்களை விமர்சிப்பவர்கள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.