தேக்கம்பட்டி அருகே கிராம பகுதிகளில் உரிய நேரத்தில் பேருந்து வராததால் பள்ளி செல்ல காலதாமதம் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார்

புகார் மனு;

Update: 2025-07-07 07:00 GMT
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்கா தேக்கம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமம் அமைந்துள்ளது இந்த கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள ஒக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று படிக்கும் நிலை உள்ளது இந்த நிலையில் அடைக்கன்பட்டி கிராமத்திற்கு ஒருநாளைக்கு ஒருமுறை மட்டும் பேருந்து வந்து செல்லும் நிலையில் அதுவும் பள்ளி நேரத்திற்கு ஏற்ப பேருந்து வராததால் அடைக்கன்பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை என பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர் இந்த நிலையில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர் இது குறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறுகையில் அடைக்கண்பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 100 மாணவர்கள் படித்து வரும் நிலையில் தங்களது பகுதிக்கு காலை 8.50 மணி அளவில் அரசு பேருந்து வருவதால் பள்ளிச் செல்லும் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் எனவே தங்கள் கிராமத்திற்கு காலை 8 மணிக்கு முன்பாக அரசு பேருந்து சேவை கிடைக்க வேண்டும் என கோரிக்கை அளித்துள்ளனர் இதுகுறித்து கடந்த மாதம் கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அது குறித்து நடவடிக்கை எடுக்காததால் தற்போது மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் பேட்டி - பாண்டீஸ்வரி (அடைக்கன்பட்டி கிராம மக்கள்)

Similar News