பிஜேபி அலுவலகத்திற்கு முறைகேடாக குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டிப்பு

தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டித்து நடவடிக்கை;

Update: 2025-07-07 09:19 GMT
தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டித்து நடவடிக்கை தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி தனசேகரன் நகர் ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர் அப்போது தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் முறைகேடாக எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பு என கூறி குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும் இது தொடர்பாக தங்களை தடுத்ததாக மாநகராட்சி ஊழியர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த புதிய கட்டிடத்திற்கு இதுவரை மாநகராட்சியில் தீர்வை செலுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பிஜேபி அலுவலகத்திற்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.‌

Similar News