டீச்சர் காலனி அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி உயிரிழப்பு.
டீச்சர் காலனி அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி உயிரிழப்பு.;
டீச்சர் காலனி அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி உயிரிழப்பு. கரூரை அடுத்த கவுண்டம்பாளையம் டீச்சர் காலனி பகுதியை சேர்ந்தவர் கோபால் மனைவி இராமாயி வயது 80. இவர் ஜூலை 5ஆம் தேதி காலை 8:15 மணியளவில் கரூர் - திருச்சி சாலையில் டீச்சர்ஸ் காலனி ஐஓபி பேங்க் அருகே நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த கரூர் மாவட்டம் புலியூர் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்கிற சிவா வயது 19 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் , நடந்து சென்ற இராமாயி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த இராமாயின் மகன் மதியழகன் வயது 56 அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த ராமாயி உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.