விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
மதுரை செக்கானூரணி அருகே வாலிபர் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கே. செட்டிகுளம் கிழக்கு தெருவில் வசிக்கும் நல்லமாயன் மகன் சிவசந்திரன்( 29 ) என்பவர் பிஎஸ்சி தாவரவியல் படித்துவிட்டு மலேசியாவில் இரண்டு வருடங்கள் டிரைவராக பணிபுரிந்து இருக்கிறார். சொந்த ஊருக்கு திரும்பிய சிவசந்திரன் கடந்த ஒன்றரை வருடங்களாக ஆக்டிங் டிரைவராக பணியாற்றி இருக்கிறார். இவர் கடந்த இரண்டு மாதங்களாக தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது தாய் கடந்த மாதம் 20ம் தேதி செலவுக்கு ரூபாய் ரூ.2000 கேட்ட பொழுது தன்னிடம் ரூ200 மட்டும் இருப்பதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்கள் தேடுகின்ற போது செட்டிகுளம் தினேஷ் தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை.6) மதியம் உயிரிழந்தார். இது குறித்து சகோதரர் சிவா செக்கானூரணி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.