மா காளியம்மன் கும்பாபிஷேகம்
மதுரை அருகே மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது;
ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (ஜூலை.7) நடைபெற்றது, மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம், அழகர்கோவில் வழி, வெள்ளியங்குன்றம் ஜமீன், மாத்தூர் ஊராட்சி பில்லுசேரி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் திருக்கோவில் ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கிராம அம்பலகாரர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் தலைமையிலும், சிவாச்சாரியார் மகேஷ்வர சாஸ்திரிகள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு எடுத்துவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது, அதனை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது, இந்த அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,