மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு

12 வருடங்களாக தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து தருவதில் காலதாமதம் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தனிப்பிரிவு போலீசார் மீட்டனர்.;

Update: 2025-07-07 14:53 GMT
ராமநாதபுரம் மாவட்டம் சின்ன தொண்டி அடுத்த தெற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது தந்தை சோனையன். சோனயனுக்கு சொந்தமான இடத்தை அவரது மகனான தர்மராஜுக்கு பட்டா மாற்றி தருவது தொடர்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் தர்மராஜ் மனு கொடுத்துள்ளார் . ஆனால் 12 வருடங்களாக பட்டா மாறுதல் செய்து தராததால் தர்மராஜ் மன உளைச்சல் அடைந்தார் இது தொடர்பாக ஆர்டிஓ விடம் மனு கொடுத்துள்ளார். இதுவரை தனது அப்பாவுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பட்டாவை தனது பெயர் மாற்றி தரவில்லை எனவும், இடத்தை அளவீடு செய்ய கோரியும் நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தாலும் அதனை ஏற்காமல் இதுவரை நிலத்தை அளவீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதால் விரக்தியில் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்க நாள் கூட்டத்திற்கு வந்திருந்த தர்மராஜ் அங்க இருந்த மரம் ஒன்றில் ஏறி கயிறு கட்டி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.இதையடுத்து கேணிக்கரை மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாரான கண்ணன் மரத்தின் மீது ஏறி அவரை பத்திரமாக மீட்டார். பின்னர் தீயணைப்புத் துணியினர் வந்து அவரை மீட்டனர் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்திலிருந்து தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

Similar News