ராமநாதபுரம்அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரு பூர்ணிமா விழா நடைபெற்றது

இராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரு பூர்ணிமா விழா நடைபெற்றது;

Update: 2025-07-07 14:55 GMT
ராமநாதபுரம்மாவட்டம்இராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரு பூர்ணிமா விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சத்குரு மாதா அமிர்தானந்த மயி மடத்தின் சீடர் பிரம்மச்சாரி சித்தானந்தாமிர்தா சைதன்யா சுவாமிஜி வருகை தந்து சத்குரு அம்மாவின் பாதங்களுக்கு பாதுகை அபிஷேகம் செய்து சத்சங்கம் நிகழ்த்தினார்.பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா முன்னிலை வகித்தார். நிகழ்வின் ஒரு பகுதியாக குழந்தைகள் தங்கள் பெற்றோரை முதல் குருவாக ஏற்று அவர்களின் பாதங்களை கழுவி அபிஷேகம் மற்றும் பூஜை செய்து ஆசிர்வாதம் பெறும் நிகழ்வான மாத்ரு பூஜை நடைபெற்றது . பெற்றோர்களும் குழந்தைகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Similar News