மலைக்கோவிலூரில் சேதம் அடைந்த கிராம சாலையை சீர் செய்ய கோரிக்கை.
மலைக்கோவிலூரில் சேதம் அடைந்த கிராம சாலையை சீர் செய்ய கோரிக்கை.;
மலைக்கோவிலூரில் சேதம் அடைந்த கிராம சாலையை சீர் செய்ய கோரிக்கை. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சியில் மலைக்கோவிலூரில் இருந்து வெங்கடாபுரம் செல்லும் சாலை ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சாலையில் கடந்த ஆண்டு ஒரு நாலு கிலோ மீட்டர் வரை சாலை அமைத்தனர்.மீதமுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்காமல் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் கிராமத்தில் இருக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதம் அடைந்த ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள அந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர் கிராம மக்கள்.