கடலூர் ரயில் வேன் விபத்து குறித்து மதுரை எம்பி கருத்து

கடலூர் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட ரயில்வே கிராஸ் வேன் விபத்து குறித்து மதுரை எம்பி கருத்து தெரிவித்துள்ளார்;

Update: 2025-07-08 08:58 GMT
கடலூர் அருகே இன்று காலையில் ரயில்வே லெவல் கிராசிங் பொதிகை நடந்த பள்ளிவேல் விபத்து குறித்து மதுரை எம்பி மத்திய அரசை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார் . முக்கியமான லெவெல் கிராசிங் என்பதால் சுரங்க பாதை அமைக்க முயற்சித்தோம். ஆனால் ஒரு வருடமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி தரவில்லை என தெற்கு இரயில்வே குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து கடலூர் மாவட்ட நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இவ்வளவு முக்கியமான லெவெல் கிராசிங் என தெரிந்தும் அது சிக்னலுடன் ஏன் இணைக்கப்படவில்லை? என்பதற்கு தெற்கு இரயில்வே பதில் சொல்ல வேண்டும். என மதுரை எம்.பி வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News