கரூரில் குலுக்கல் மூலம் குடியிருப்பு ஒதுக்கிட்டிற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூரில் குலுக்கல் மூலம் குடியிருப்பு ஒதுக்கிட்டிற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.;
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கரூரை அடுத்த தோரணக்கல்பட்டி பகுதியில் உள்ள நேரு நகர் திட்டப் பகுதியில் 640 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. சொந்த வீடு இல்லாத பொதுமக்களுக்கு மத்திய மாநில அரசுகளின் நிதி உதவி மற்றும் பயனாளி பங்களிப்பு தொகையோடு கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிகளில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டிற்கான குலுக்கள் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் வாரியத்தின் செயற்பொறியாளர் குமரதுரை தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பயனாளிகளிடம் நேர்காணல் செய்து பிறகு குலுக்கள் முறையில் அவர்களுக்கு வீடுகளை ஒதுக்கி தந்தனர். மொத்தம் 640 வீடுகளுக்கு 430 பேர் தங்களது பங்கு பங்களிப்பு தொகையான தலா ரூபாய் ஒரு லட்சத்து 18 ஆயிரம் செலுத்தி உள்ளனர். இதில் ஏற்கனவே 40 மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மீண்டும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. இதே போல நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. மற்ற பயனாளிகளுக்கு இரண்டாவது தளம் , மூன்றாவது தளம் என குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. இந்த குலுக்களில் பயனாளிகளே நேரில் கலந்து கொண்டு அவரவர் வீடுகளுக்கான எண்ணை அவர்களே குழுக்கள் முறையில் தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.