கரூர்- புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும்.

கரூர்- புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும்.;

Update: 2025-07-08 10:48 GMT
கரூர்- புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமா நிலையூர் பகுதியில் ரூபாய் 40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் இன்று காலை ஜவகர் பஜார் பகுதியில் அம்மா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தஞ்சை மதியழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவித்த மதியழகன்,புதிய பேருந்து நிலையத்தில் திமுகவினருக்கு மட்டும் ஆட்டோ ஸ்டாண்ட் போடுவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும்,இது பொதுமக்களுக்காக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் இதில் கட்சி பாகுபாடு இல்லாமல் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News