தவிட்டுப்பாளையம்-டூவீலரை வேகமாக ஓட்டி செக் போஸ்டில் மோதி விபத்து.

தவிட்டுப்பாளையம்-டூவீலரை வேகமாக ஓட்டி செக் போஸ்டில் மோதி விபத்து.;

Update: 2025-07-08 12:54 GMT
தவிட்டுப்பாளையம்-டூவீலரை வேகமாக ஓட்டி செக் போஸ்டில் மோதி விபத்து. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் , சித்தலவாய் அருகே உள்ள கீழ முனையனூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன் வயது 24. இவர் ஜூலை 7ஆம் தேதி மாலை 6 மணி அளவில் டூவீலரில் கரூர்- சேலம் சாலையில் சென்றார். இவரது வாகனம் தவிட்டுப்பாளையம் செக்போஸ்ட் அருகே சென்றபோது வேகமாக டூவீலரை இயக்கியதால் செக் போஸ்டில் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக அவரது மனைவி மணிமேகலை அளித்த புகாரில் அழகேசன் மீது வழக்கு பதிவு செய்தனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Similar News