சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் ஆளித்த பள்ளிவேன் ஓட்டுநர்மீது குண்டர்சட்டம்

மயிலாடுதுறையில் 15 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு:-;

Update: 2025-07-08 17:01 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை, சேத்தூர், மேலத்தெருவைச் சேர்ந்த மதுமோகன் (35) என்பவர் கடந்த ஜூன் மாதம் தமது வேனில் அழிச் அழைத்துச் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். தனியார் வேனில் மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளை அழைத்துசெல்லும் மதுமோகன் 15 வயது சிறுமியான மாணவி ஒருவரை வேனில் வருபவர்களின் பெயர் பதிவேடு எழுதவேண்டும் என்று கூறி மாணவியை பள்ளியில் இறக்கிவிடாமல் அழைத்துசென்று பாலியல் சீணடல் செய்ததாக சிறுமி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மதுமோகன் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012ன் படி வழக்கு பதிவு செய்தனர். மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி புலன்விசாரணை மேற்கொண்டு, மதுமோகனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். இந்நிலையில் மதுமோகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததின் பேரில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான போலீசார் கடலூர் மத்திய சிறைக்கு சென்று கூண்டல்குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவை வழங்கினர். .

Similar News