முனுகப்பட்டு பச்சையமமன் ஆலய வளாகத்தில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்.
ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள பச்சையம்மன் ஆலயத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு அபிஷேகமும், பக்தர்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.;
ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள பச்சையம்மன் ஆலயத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு அபிஷேகமும், பக்தர்களுக்கு இனிப்புகளும் வழங்கினர். ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள பச்சையம்மன் ஆலயத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கடலூர் எம்.பியுமான எம்.கே.விஷ்ணுபிரசாத்தின் பிறந்த நாள் முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் வட்டாரதலைவர்கள் சோலைமுருகன், ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக ஆரணி தொகுதி பொறுப்பாளர் யு.அருணகிரி கலந்துகொண்டு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். அனைவரையும் பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் வரவேற்றார். நகரதலைவர் டி.ஜெயவேலு, எஸ்.சி, எஸ்.டி துறை மாவட்டதலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் வி.பாபு, துணைத்தலைவர் ஏ.அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை இளைஞரணி காங்கிரஸ் மாவட்டதலைவர் ஆர்.ஹேமச்சந்திரன் செய்திருந்தார்.