கரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த துணை முதலமைச்சருக்கு அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு.
கரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த துணை முதலமைச்சருக்கு அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு.;
கரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த துணை முதலமைச்சருக்கு அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு. கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு கரூருக்கு வந்தார். இன்று காலை முதல் நிகழ்வாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை பணிகள் கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு ஆட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கரூர் எம்பி ஜோதிமணி எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ சிவகாமசுந்தரி கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துணைமேயர் சரவணன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்து துறை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தனது பணிகளை துவக்கினார்.