தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தொழிலாளர் விவசாய விரோத கொள்கைகளைக் கண்டித்து மன்னார்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .;
நாடு முழுவதும் விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறும் நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விவசாய சங்க மாவட்டத் தலைவர் தம்பு சாமி தனிமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த வேண்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாக்க கூடாது அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.