புன்னம்சத்திரம் - அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. வாலிபர் படுகாயம்.

புன்னம்சத்திரம் - அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. வாலிபர் படுகாயம்.;

Update: 2025-07-09 08:57 GMT
புன்னம்சத்திரம் - அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. வாலிபர் படுகாயம். புகலூர் தாலுக்கா வேட்டமங்கலம் அருகே அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 45. ஜூலை 7ஆம் தேதி இரவு 7 மணி அளவில் புன்னம் சத்திரம் - வேலாயுதம்பாளையம் சாலையில் டூவீலரில் சென்றார். அப்போது வேலாயுதம்பாளையம் கலைமகள் நகரை சேர்ந்த ஜோசன் கிங்ஸ்லி வயது 22 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மின்சார க கார் சுரேஷ் ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷை கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் அறிந்த சுரேஷின் மனைவி இளஞ்சியம் அளித்த புகாரில் காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜோசன் கிங்ஸ்லி மீது வேலாயுதம்பாளையம் காவல்துறை வழக்கு பதிவு.

Similar News