அமராவதி பாலத்தில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து. தந்தை மகள் படுகாயம்.

அமராவதி பாலத்தில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து. தந்தை மகள் படுகாயம்.;

Update: 2025-07-09 09:56 GMT
அமராவதி பாலத்தில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து. தந்தை மகள் படுகாயம். கரூர் மாவட்டம் அப்பி பாளையம் அருகே கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் வயது 34. இவரது மகள் மகிழினி வயது 8, இருவரும் ஜூலை 7-ம் தேதி மாலை 6:30 மணி அளவில் சேலம் - மதுரை சாலையில் டூ வீலரில் சென்றனர். இவர்களது வாகனம் பழைய சுக்காலியூர் அமராவதி ஆற்றுப்பாலத்தில் செல்லும்போது , அதே சாலையில் பின்னால் வந்த கரூர் தெற்கு வெள்ளியணை அருகில் உள்ள பள்ள சங்கனூர் பகுதியைச் சேர்ந்த முருகன் வயது 49 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி , அன்பரசன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது . இதில் நிலை தடுமாறி டூவீலருடன் கீழே விழுந்ததில் தந்தை , மகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக அன்பரசன் அளித்த புகாரில் லாரியை வேகமாகவும்,அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம்காவல்துறையினர்.

Similar News