முதல்வரை பார்க்க நீண்ட நேரம் காத்திருந்த பள்ளி மாணவர்கள்
முதலமைச்சர் ஸ்டாலின் "ரோடு ஷோ"வில் மதியத்தில் இருந்து காத்திருந்த பள்ளி மாணவர்கள்;
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் வந்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இன்று ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார். அதனை முன்னிட்டு பவித்திரமாணிக்கம், துர்காலயா ரோடு, தெற்கு வீதி,பணகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக வந்து கருணாநிதியின் சிலையை திறக்க உள்ளார்.இதனால் அப்பகுதியில் சாலையின் இரண்டு பகுதியிலும் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க சாலையின் ஓரத்தில் பொதுமக்கள் நிற்கவைக்கப்பட்டுள்ளனர்மேலும் அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மக்களோடு மக்களாக பள்ளி மாணவர்களை சீருடையுடன் நிற்க வைத்துள்ளனர்.இரவு 7 மணிக்கு ரோடு ஷோ நடைபெற்ற நிலையில் பள்ளி மாணவர்களை மதியம் மூன்று மணியிலிருந்து நிற்கவைக்கப் பட்டுள்ளனர்.