மேலூரில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
மதுரை மேலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
மதுரை மேலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மருத்துவ துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (ஜூலை.9) நடைபெற்றது. சுகாதாரப்பணிகள் இணை, துணை இயக்குனர்கள் செல்வராஜ், நடராஜன் துவக்கி வைத்தனர். பேரணியில் மாணவ மாணவிகள் அழகர் கோவில் டாக்ஸி ஸ்டாண்ட் வழியாக பேருந்து நிலையம் சென்று பேங்க் ரோடு வழியாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தனர். விழாவில் கிரஸண்ட் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.