அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை;

Update: 2025-07-10 04:17 GMT
திண்டுக்கல் சீலப்பாடி, ராஜ் நகர் பகுதியை சேர்ந்த முத்தையா(43) இவர் நத்தம் அருகே பட்டினம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கையிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடன் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News