ராமநாதபுரம்திடீரென தீப்பிடித்த வாகனம் எரிந்து நாசம்

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திடீரென வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி;

Update: 2025-07-10 11:15 GMT
ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மகாலுக்கு சொந்தமான tata ஏசி வாகனம் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது அச்சுந்தன் வயல் என்ற பகுதியில் செல்லும் பொழுது வாகனத்தில் இருந்த இயற்கை எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து மள மள என எரிந்தது இதை அறிந்த வாகன ஓட்டுனர் திடீரென வாகனத்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார் மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதி என்பதால் அனைத்து வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அச்சம் அடைந்தனர் அதன் பின்பு தீயணைப்புத் துறையினர் பரவழைக்கப்பட்டு தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது போக்குவரத்து சீர் செய்யப்பட்டது வாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் எரிவாயு கசிவு இருந்ததை கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது இதனால் இந்த தீ விபத்து நடந்துள்ளது என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்

Similar News