மருத்துவமனை முன்பு மழை நீர் தேங்குவதால் நோயாளிகள் அவதி

மதுரை மேலூர் கருங்காலக்குடி மருத்துவமனை முன்பாக நீர் தேங்குவதால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.;

Update: 2025-07-10 11:15 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேடு பள்ளமாக காணப்படும் இந்த சாலையில் அவசர கால ஆம்புலன்ஸ் வாகனம் வந்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கும் நிலை உள்ளதால் இந்த சாலையை விரைவில் சீரமைத்திட வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News