செல்பி புகைப்படம் எடுத்து மாணவியர்களை மகிழ்வித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

செல்பி புகைப்படம் எடுத்து மாணவியர்களை மகிழ்வித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..;

Update: 2025-07-10 13:41 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் செல்பி, குழு புகைப்படம் எடுத்து மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழத்தினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி சமூக நீதி மாணவியர் விடுதி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்), மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சமூக நீதி மாணவியர் விடுதியை திறந்து வைத்தார். பின்னர் மாணவிகள் இடம் குறைகளை பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கிருந்த அரசுக் கல்லூரி மாணவியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் மாணவியர் செல்பி எடுத்துக்கொள்வதாக கூறினர். இதனையடுத்து மாணவியர் ஒருவரின் கைப்பேசியை வாங்கி அவர் மாணவியருடன் செல்பி எடுத்து அனைவரும் அந்த மாணவியிடம் புகைப்படம் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொண்டார். மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதால் கல்லூரியின் மாணவியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த விழாவில், ராசிபுரம் அட்மாக்குழு தலைவர் கே.பி.ஜெகந்நாதன், ராசிபுரம் வட்டாட்சியர் சசிக்குமார், கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ஆர்.சிவக்குமார், கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.கார்த்தி , மாணவர் அணி சத்தியசீலன், உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

Similar News