ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் விபூதி அபிஷேகம், பாலபிஷேகம்

குரு பூர்ணிமாவை முன்னிட்டு பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்களின் திருகரங்களால் விபூதி அபிஷேகம், பாலபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது;

Update: 2025-07-11 03:51 GMT
ஆனி மாதம் பௌர்ணமி தினமான இன்று குரு பூர்ணிமா வாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவர்கள், ஆன்மீக அன்பர்கள், பொதுமக்கள் தங்களது குருவைப் போற்றி அவர்களுக்கு நன்றி செலுத்தும் நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். அவ்வகையில் திண்டுக்கல் நாகல்நகர், பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் மூல வரையிலுள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு பக்தர்களின் திருகரங்களால் விபூதி அபி அபிஷேகம், பாலபிஷேகம் மற்றும் பக்தர்களின் திருகரங்களால் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நவகிரக பாபாவை சுற்றி வந்து நித்திரை பாபாவை நித்திரையடைய செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஒன்று கூடி விஷ்ணு சகஸ்பர பாராயணமும், சாய்பாபா சத்சரிதம் பாராயணமும் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய் தரிசனம் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அருள் பிரசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது.

Similar News