திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் பேட்டி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 112 முகாம்கள் வருகிற 15.07.2025-ல் தொடங்கி 14.08.2025 வரை நடைபெறும். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த முகாம்கள் அடுத்தடுத்த மாதங்களில் நடத்தப்படுகிறது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நடைபெறவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.