இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண் ரத்தக்கசிவு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
உயிரிழப்பு;
மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தேனி அருகே உள்ள வாலையத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி ஜெயலட்சுமி இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த 10 ஆம் தேதி காலை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ரத்தகசிவு காரணமாக ஜெயலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு கர்ப்பப்பை அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்து பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் மருத்துவர்கள் தொடர்ந்து அலட்சியமாக மருத்துவம் பார்த்ததே உயிர் இழப்பிற்கு காரணம் எனக்கூறி உறவினர்கள் காலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் குமுளி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயற்சித்த போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக பரபரப்பான சூழல் தற்போது நிலவி வருகிறது. இதனை அடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் அளிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதுகுறித்து பெண்ணின் உறவினர் கூறுகையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது பின் ரத்தக்கசிவு ஏற்பட தொடங்கியது மூன்று மணி நேரமாக மருத்துவர்கள் இதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர் பின் நாங்கள் மருத்துவர் அழைத்து வந்து கூறிய பின்பு தான் பெண்ணின் நிலை குறித்து பார்த்தார்கள் ஆனால் கர்ப்பிணி பெண்ணின் நிலை குறித்து தங்களுக்கு எந்தவித தகவலும் கொடுக்காமல் மறைத்ததாகவும் எப்போது இறந்தார் என்பது குறித்த எங்களுக்கு முறையான தகவல் கொடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு பெண் உயிரிழந்ததாக தெரிவித்தனர்