தேனியில் பட்டியலின சமுதாய மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக என புகார்

புகார்;

Update: 2025-07-12 09:53 GMT
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு ஏழ்மை நிலையில் உள்ள பட்டியலின சமுதாயத்திற்கு தமிழக அரசால் சுமார் 4 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது 4 ஏக்கர் பஞ்சமி நிலங்களை பட்டியலின சமுதாயம் மக்கள் சாராத தனி நபர்கள் இடத்தை சுற்றி வேலி போட்டு கட்டிடங்களை கட்டப்பட்டு ஆக்கிரமித்து செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது இந்நிலையில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு குறித்து பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் தெரிவிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தில் குடியேறும் போராட்டம் இன்று நடைபெற்றது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் இடத்தை சுற்றி இருந்த தடுப்பு கம்புகளை பிரித்து எரிந்து வேலிகளை பிடுங்கி எரிந்து தங்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியேறும் போராட்டம் நடத்தினர் அப்போது இடத்தினை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் அவர்களை தடுக்க முயற்சி செய்ததால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது மாவட்ட நிர்வாகம் இடத்தினை கையகப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தடுப்பு வேலிகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட இடங்களில் அமர்ந்து குடியேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வேலிகளை பிரித்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அப்போது வருவாய் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர் இதனைத் தொடர்ந்து தற்போது வரை எந்தவித நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Similar News