உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும் ஆட்சியர் வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும் ஆட்சியர் வலியுறுத்தல்;

Update: 2025-07-12 11:24 GMT
திருப்பத்தூர் மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும் ஆட்சியர் வலியுறுத்தல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10.000 சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது. வரும் 15.07.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் முதல் முகாம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று பயனடையமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும், இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 209 முகாம்கள் நடைபெறவுள்ளது. இவை, ஜீலை 15 தேதி முதல் ஆகஸ்ட் 14 தேதி வரை 72 முகாம்களும் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை 72 முகாம்களும் மற்றும் செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 15 வரை 65 முகாம்களும் நடைபெறவுள்ளது. இதில், நாள் ஒன்றுக்கு 6 முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி 15.07.2025 தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ்கண்ட 6 இடங்களில் முகாம் நடைபெறவுள்ள விவரம்: நகராட்சி/பேரூராட்சி/நகர பஞ்சாயத்து, வட்டாரம் ஆம்பூர் நகராட்சி 2. உதயேந்திரம் பேரூராட்சி முகாமில் கலந்து கொள்ள ஒதுக்கப்பட்டுள்ள வார்டு மற்றும் கிராமம் விவரம் வார்டு எண்.15,16 வார்டு எண். 12345 முகாம் நடைபெறும் இடம் 1 பூவாசாதி மஹால், சின்ன மசூதி தெரு ஆம்பூர் இருதய ஆண்டவர் கோயில் மண்டபம். வாணியம்பாடி உதயேந்திரம் உள்ளிட்ட திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முகாமுகளில் பயன் பெறுமாறு ஆட்சியர் வலியுறுத்தல்

Similar News