தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை
சின்னாளபட்டியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை;
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை கழக தேர்தல் பொறுப்பாளரும், தி.மு.க. மாநில விவசாய அணி இணை செயலாளருமான கள்ளிப்பட்டி மணி ஆத்தூர் தொகுதி முழுவதும் நிர்வாகிகளுடன் ஓரணியில் தமிழகம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதை பார்வையிட்டு ஆலோசனை வழங்னகினார். சின்னாளபட்டியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் காமாட்சி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோருடன் சென்று 13வது வார்டு தம்பித்தோட்டம் மருத்துவமனை சாலையில் உறுப்பினர் சேர்க்கையை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.