பேருந்துக்கு மாலை போட்டு வரவேற்பு

காமனூர் மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்களது பகுதிக்கு பேருந்து சேவை இன்று தொடங்கியது இனிப்பு வழங்கி வெடி வெடித்து பேருந்துக்கு மாலை போட்டு வரவேற்ற பொதுமக்கள்;

Update: 2025-07-12 20:11 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதியான காமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமனூர், கெடலங்காடு, பட்லங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் இப்பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயக் கூலி தொழிலுக்கு இப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். தமிழக அரசுக்கு தொடர்ந்து தங்களது பகுதிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்நிலையில் வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து தாண்டிக்குடி செல்லும் அரசு பேருந்து காமனூர் வழியாக கெடலங்காடு. பட்டங்காடு வழியாக செல்லும்தினம்தோறும் மூன்று முறை இப்பகுதி வழியாக செல்லும் என அறிவிப்பு வெளியானது இதை அடுத்து பொதுமக்கள் பெண்கள் காமனூர் நுழைவாயிலில் அரசு பேருந்து வரவேற்று பேருந்து ஓட்டுனர் நடத்தினருக்கு பொன்னாடை போர்த்தி பேருந்துக்கு மாலை போட்டு.வெடிவைத்து பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர் மேலும் இப்பகுதி பெண்கள் கூறும் பொழுது எங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அனைவருக்கும் நன்றி பேருந்து வருவதால் எங்களது பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் அதேபோல் சிறு விவசாயிகள் பயனடைவார்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Similar News