அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ வழக்கில் கைது.
அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ வழக்கில் கைது.;
வாணியம்பாடி அருகே இல்லம் தேடி கல்வி பயில சென்ற அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ வழக்கில் கைது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம், ரங்கன்வட்டம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, இவர் பூங்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், 8 ஆம் வகுப்பு மாணவி நேற்று இரவு அதே பகுதியில், இல்லம்தேடி கல்வி டியூசன் சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் சிறுமியை வழிமறித்து அவருக்கு மாம்பழம் பறித்து தருகிறேன் எனக்கூறி அருகில் உள்ள மாந்தோப்பிற்கு அழைத்துச்சென்று சுப்பிரமணி 8 ஆம் வகுப்பு மாணவியிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார், உடனடியாக அவரை தள்ளிவிட்டு தப்பியோடிய மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார், அதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் இதுகுறித்து ஆலங்காயம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சிறுமியிற்கு பாலியல் தொந்தரவு அளித்த சுப்பிரமணியை இன்று ஆலங்காயம் காவல்துறையினர் கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.