கண்டமனூர் காவல் நிலைய காவல்துறையினர் (ஜூலை 12) குற்ற தடுப்பு சம்பந்தமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்திய பொழுது டிரைவர் டிராக்டர் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். சோதனையில் அரசு அனுமதியின்றி ஓடை மணல் அள்ளி சென்றது தெரிய வந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினர் டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்