ராமநாதபுரம் ஆண்டி ஐயா கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

ஆண்டி ஐயா ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு;

Update: 2025-07-13 09:37 GMT
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வாலாந்தரவை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டி ஐயா, ஸ்ரீ தர்ம முனீஸ்வரர்,ஸ்ரீ பேச்சியம்மன் ஆகிய ஆலயங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது கருட பகவான் வானில் வட்டமிட்டு போது கும்ப கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர் ஏராளமான ஆன்மிக பொதுமக்கள் குலவையிட்டனர், வாலாந்தரவை வழுதூர்,உடைச்சியார் வலசை, கீரிப்பூர்வலசை தெற்கு காட்டூர் மொட்டையன் வலசை , தெற்கூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்

Similar News