தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு
திண்டுக்கல், வேடசந்தூர் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு:;
திண்டுக்கல், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தொகுதி நிலவரம், உறுப்பினர் சேர்க்கை குறித்து கேட்டறிந்தார். தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் முழுவீச்சில் ஆளுங்கட்சியான திமுக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், "உடன் பிறப்பே வா" என்ற பெயரில் 'ஒன் டூ ஒன்' மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். இதில் 2 தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட அமைச்சர் அர.சக்ரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசி அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.