நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டில் சோறு சமைத்து சாப்பிட்ட பொதுமக்கள்

நாட்றம்பள்ளி அருகே எதிர்ப்பை வெளிப்படுத்த சுடுகாட்டில் சோறு சமைத்து சாப்பிட்ட பொதுமக்கள்;

Update: 2025-07-13 13:54 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டில் சோறு சமைத்து சாப்பிட்டு கல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பொதுமக்களால் பரபரப்பு. நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்பு குட்டை அடுத்த அக்ரஹாரம் மலைப்பகுதியில் குடியிருப்பு பகுதிகள் அருகாமையிலேயே கல்குவாரி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் முதல் இந்த கல்குவாரி அமைக்க கூடாது என்று அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதாவது கல்குவாரி அமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் இடைவெளியில் எந்த வீடுகளும் இருக்கக் கூடாது என்கிற விதிமுறை உள்ளது. ஒரு நாளைக்கு 45 டன் எடையுள்ள கற்களை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதி உள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த விதிமுறைக்கு மீறி 500 மீட்டர் தூரத்திற்கு உட்பட்ட இடத்தில் சுமார் 30 வீடுகள் உள்ளன ஒரு நாளைக்கு 45 டன் எடுக்க வேண்டிய கற்களை பத்து மடங்கு அதிகரித்து 4000 டன் எடுக்கிறார்கள் இதுபோன்ற அரசு விதிமுறையை தாண்டி கல்குவாரி நடத்துவதை எதிர்த்து நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடினோம் அவர்களும் விதிமுறை தவிர்க்க வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர் ஆனால் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து தொடர்ந்து கல்குவாரியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் இதனை எதிர்த்து நாங்கள் சுடுகாட்டில் அமர்ந்து சோறு சமைத்து உண்டு உறங்கி, கல்குவாரி வேண்டாம் என கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பிறகுகாவது எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தங்களுடைய ஆதங்த்தை முன் நிறுத்தி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Similar News